8 ஆண்டுகளுக்கு பிறகு தங்கப்பத்திரத்தின் நிலை என்ன?
பணம் இருக்கிறது அதை சரியான வகையில் முதலீடு செய்யவேண்டும் என்று நினைப்போருக்கு sgb எனப்படும் தங்கப்பத்திரங்கள் நல்ல சாய்ஸ். 8 ஆண்டுகளுக்கு பிறகு பங்குச்சந்தைகளில் கிடைக்கும் ரிட்டன்ஸ் போலவே தங்கப்பத்திரங்களும் நல்ல பலன் தரும். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தங்கப்பத்திரங்களில் முதலீடு செய்தவர்களுக்கு வரும் நவம்பர் மாதம் பலன் கிடைக்க இருக்கிறது. கடந்த 2015ஆம் ஆண்டு 2,684 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கப்பத்திரம் , 12% வளர்ச்சி பெற்றுள்ளது. வழக்கமாக பங்குச்சந்தைகளில் டிவிடன்ட்ஸ் ரிட்டர்ன்ஸ் வருவது 13.82%ஆக இருக்கிறது. தங்கப்பத்திரத்தில் முதலீடு என்பது அப்போது இருந்த விலைக்கும் இப்போதைய விலைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. தங்கத்தின் மீதான முதலீடு என்பது ஆபத்து காலத்தில் அடகு வைத்து பணமாக மாற்றவும்,விலைவாசி உயர்வு அபாயத்தை தடுக்கும் பாதுகாப்பான வழியாகவும் கருதப்படுகிறது.செய்யும் முதலீடுகளில் 15% சர்வதேச தங்க முதலீடுகளாக இருந்தால் அது நல்ல வருவாய் தரும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 109 டன் தங்கம் இந்த வகையில் முதலீடாக பெறப்பட்டுள்ளது.அவுட்ஸ்டேன்டிங் பத்திரத்தின் மதிப்பு 64,650 கோடி ரூபாயாக இருக்கிறது.குறைந்தபட்சம் ஒருகிராமில் இருந்து அதிகபட்சமாக 4 கிலோவரை ஒருநபர் தங்கப்பத்திரத்தில் முதலீடுகளை செய்ய இயலும்.இதில் முதலீடு செய்வது என்பது வரி இல்லாத முதலீடு என்றும்,ஆண்டுக்கு இருமுறை பணம் செலுத்தும் வசதியும் உள்ளது. 8 ஆண்டுகள் முடிவில்தான் இந்த பத்திரங்கள் முதிர்ச்சி அடையும், நடுவில் வெளியேற வேண்டும் என்றால் 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் வெளியேற முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.