உஷாரான முதலீட்டாளர்கள் …
வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளில் இந்திய சந்தைகளில் லேசான சரிவு காணப்பட்டது. இந்தியாவின் ரிசர்வ் வங்கி தரவுகள் வரும் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் சூழலில் அதற்காக முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர். மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 106 புள்ளிகள் குறைந்து 65,846 புள்ளிகாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 26 புள்ளிகள் குறைந்து 19,570 புள்ளிகளாவும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகள்,விலைவாசி, தொழிற்சாலை உற்பத்தி உள்ளிட்ட தரவுகளை வைத்து இந்திய சந்தைகளில் நிலையற்ற சூழல் காணப்பட்டது. Adani Enterprises, Power Grid Corporation, Hindalco Industries, M&M உள்ளிட்ட நிறுவனங்கள் பெரிய சரிவை சந்தித்தன. விப்ரோ, Hero MotoCorp, SBI Life Insurance, Cipla, Tech Mahindra உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை சந்தித்தன. Venus Pipes & Tubes, Torrent Pharmaceuticals, Shyam Metalics and Energy, Syngene International, Religare Enterprises, RailTel Corporation of India, PB Fintech, NLC India, Grasim Industries, Patel Engineering, Muthoot Finance, Lupin, L&T Technology Services, Kolte-Patil Developers, Karnataka Bank, ITD Cementation, GMR Airports Infrastructure, Genus Power Infrastructures, Dr. Reddy’s Laboratories, Cipla உள்ளிட்ட 250க்கும் அதிகமான நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டன. பொதுத்துறை வங்கி நிறுவன பங்குகள் 3.3% உயர்வை கண்டன.மற்றத்துறை பங்குகள் பெரிதாக சரிந்தன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 5,540 ரூபாயாக இருக்கிறது.ஒரு சவரன் 44,320 ரூபாயாக இருக்கிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 77 ரூபாய் 30 காசுகளாக இருக்கிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து 77ஆயிரத்து 300ரூபாயாக இருக்கிறது. இந்த விலையுடன் 3% ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி சேதாரத்தை சேர்க்க வேண்டும்(கடைக்கு கடை மாறுபடும்)