இறக்குமதி செய்யப்பட்ட LPG பங்கு அதிகரிப்பு..
இந்தியாவில் உள்ள வீடுகளில் 3-ல் 2 பங்கு வீடுகளில் உள்ள சமையல் எரிவாயு உருளைகள் இறக்குமதி செய்யப்பட்ட LPG இணைப்புகளில்தான் இயங்குகின்றன. உள்நாட்டு LPG உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இறக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் சிலிண்டர் பயன்பாடு மற்றும் வெளிநாட்டு சிலிண்டரை நம்பியிருக்கும் விகிதம் 49%ஆக இருந்தது. இது தற்போது 64 % ஆக உயர்ந்திருக்கிறது.
உள்நாட்டில் சிலிண்டர் பயன்படுத்துவோரின் விகிதம் 32% உயர்ந்திருக்கிறது, சிலிண்டரில் எரிவாயு பயன்படுத்துவதற்கு பதிலாக பைப் இணைப்புகளின் மூலம் எரிவாயு பயன்படுத்த மக்கள் தொடங்கிவிட்டதால் இறக்குமதி வரும் காலங்களில் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இன்று நாட்டின் பல மூளைகளிலும் கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் கேஸ் அடுப்புகள்தான் பயன்பாட்டில் உள்ளன. வெகுசில வீடுகள் மட்டுமே கேஸ் இணைப்பு இல்லாத வீடுகளாக உள்ளன.
PNG எனப்படும் குழாய் வழி சமையல் எரிவாயு இணைப்புக்கான உரிமம் பல நிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளன, இந்த குழாய் வழி எரிவாயு இணைப்புகள் வழக்கமான சிலிண்டர்களைவிடவும் விலை மலிவானதாகும்.