சீனாவை டைம்பாம் என விமர்சித்த பைடன்!!!
ஆமாம் நீங்கள் படித்தது சரிதான்,சீனாவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இப்படித்தான் விமர்சித்துள்ளார். அந்நாட்டில் நிலவும் மோசமான சூழல் காரணமாக உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பைடன் சுட்டிக்காட்டியுள்ளார்.கொரோனாவுக்கு பிறகு சீனாவின் வளர்ச்சி என்பது மந்தகதியில்தான் இருக்கிறது. கெட்டவர்களுக்கும் தற்போதுநேரம் கெட்டு இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ளார். கெட்டவர்கள் யோசனை எப்போதும் கெட்டதாகவே இருக்கும் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அதிபர் பைடன்,இதற்குமுன்பு நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியின்போது சீன அதிபர் ஷிஜிங்க்பிங்கை சர்வாதிகாரி என்று விமர்சித்திருந்தார். 1979 ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா-சீனா இடையேயான நட்புறவு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,நிலைமையை சீரமைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அண்மையில் சீனா சென்றுவந்தார். சீனாவில் மக்களுக்கான ஊதியம் குறைந்து,மோசமான பாதிப்பு நிலையை எட்டி வருகிறது.உலகளவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில்,சீனாவின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. மிகவும் மோசமான நிலையில் உள்ள சீனாவை மேலும் வலி கொடுக்க அமெரிக்கா தயாராக இல்லை என்றும், மாறாக சீனாவுக்கு உதவி செய்யவே அமெரிக்கா விரும்பவதாகவும் பைடன் குறிப்பிட்டார். கணினி சிப் தயாரிப்பில் சீனாவில் முதலீடு செய்ய பைடன் அண்மையில் தடைவிதித்திருந்தார்.சீனாவை தொடர்ந்து அமெரிக்க அதிபர்கள் வரிசையாக விமர்சிப்பதால் நமது அண்டை நாடு செய்வதறியாது தவித்து நிற்கிறது.