வரலாற்றிலேயே முதன் முறையாக இந்திய ரூபாயில்!!!
இந்தியாவுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையேயான உறவு என்பது பல ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.இந்த நிலையில் 10 லட்சத்துக்கு அதிகமான பேரல் கச்சா எண்ணெய்க்கு தரவேண்டிய பணத்தை முதல் முறையாக அமெரிக்க டாலர்களுக்கு பதிலாக இந்திய ரூபாயில் இந்தியன் ஆயில் நிறுவனம் கொடுத்துள்ளது. இந்த பரிவர்த்தனையின் தரவுகளை அதிகாரபூர்வமாக அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 25 கிலோ தங்கம் வாங்கியதற்கு 128.4மில்லியன் இந்திய ரூபாய் சமீபத்தில் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கச்சா எண்ணெய்க்கு இந்திய ரூபாய் அளிப்பது இதுவே முதல்முறையாகும். அமெரிக்க டாலர்களாக மாற்றி, அதை மீண்டும் அரபு அமீரக பணமாக மாற்றுவதால் இரு நாடுகளுக்கும் தேவையில்லாத செலவு அதிகமாவதாக இந்திய அரசு அண்மையில் கருதியது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூலையில் ஒரு ஒப்பந்தத்தை இந்திய அரசு செய்தது. அதன்படி இனி பலதரப்பட்ட பொருட்கள் வாங்குவதற்கு இந்திய நாட்டு பணத்தையே தருகிறோம் என்பதே அந்த ஒப்பந்தமாகும்.இருநாடுகளுக்கும் இடையிலான வணிகம் கடந்த 2022-23 நிதியாண்டில் மட்டும் 84.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இருந்தது.உலகளாவிய சந்தைகளில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டு வரும் சூழலில் உள்ளூர் பணமான ரூபாயில் வர்த்தகத்தை செய்து வருவதால் இந்தியாவின் மதிப்பும் உயர்ந்து வருகிறது. உள்நாட்டு பணத்தின் மூலம் வணிகத்தை மேற்கொள்ள மத்திய அரசும் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.