வட்டியை உயர்த்திய ரஷ்ய மத்திய வங்கி..!!
எல்லா நாடுகளிலும் பொருளாதார மந்தநிலைக்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கிறது. இப்படி இருந்தும் உக்ரைனுடன் சண்டையிட்டே தீருவேன் என்று ரஷ்யா அடம்பிடித்து வருகிறது. இதனால் கடுப்பான அமெரிக்கா, ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்து வருகிறது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை ரஷ்யா தற்போது சந்தித்து வருகிறது.இந்த சூழலில் ரஷ்ய மத்திய வங்கி,தனது நாட்டு கடன் விகிதங்களை கணிசமாக உயர்த்தியுள்ளது. ரூபெல் எனப்படும் ரஷ்ய நாட்டு பணத்தின் மதிப்பை உயர்த்த ரஷ்ய மத்திய வங்கி 3.5%வட்டியை உயர்த்தியிருக்கிறது.இந்த வட்டிஉயர்வையும் சேர்த்து மத்திய ரஷ்ய வங்கியின் அளவு 12%ஆக அதிகரித்துள்ளது.கடந்தாண்டு பி்ப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்து வருகிறது. இதன் காரணமாக அமெரிக்க பொருட்களையும் , மேற்கத்திய நாடுகளில் பணியாற்றும் வேறு நாட்டு வீரர்களும் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயற்சித்தனர். ரஷ்யநாட்டு பணமான ரூபெலின் மதிப்பு கிட்டத் தட்ட 3 மடங்கு குறைந்துள்ளது. இது கடந்த 17 மாதங்களில் மிகக்குறைவாகும்.என்னதான் வரி அளவை ஒரேநாளில் உயர்த்தினாலும், ரூபெல் பணம் தனது மதிப்பை மெதுவாக இழக்கின்றன.இதன் காரணமாக அந்நாட்டு ஏற்றுமதி சரிவு,பணவீக்கம் உல்ளிட்டவை கணிசமாக உயர்ந்துள்ளது.கடன்கள் மீதான வட்டியை உயர்த்தினால் சுமை அதிகமாகும் என்று பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர். நம்ம ஊர் நிதி கொள்கை கூட்டம் போல அந்நாட்டு கூட்டம் வரும் 15ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது.கடந்த 3 மாதங்களில் அந்நாட்டு பணவீக்கம் 7.6%ஆக உயர்ந்துள்ளது. உக்ரைனுடனான போரின்போது ரஷ்ய பணத்தின் மதிப்பு ஒரு டாலருக்கு நிகராக 130 ரூபெலாக ரஷ்ய பண மதிப்பு அதிரித்துள்ளது. இப்படி திடீரென வட்டி விகிதம் மாற்றப்பட்டதால் மக்கள் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.