நெதர்லாந்துக்கு வந்த சோகமான நிலைமை…
உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் முக்கியமான நாடாக இருப்பது நெதர்லாந்து. அப்படிப்பட்ட நெதர்லாந்துக்குத்தான் இப்போது துக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதாவது அந்நாட்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் வளர்ச்சி 0.3 விழுக்காடு குறைந்துள்ளது.கடந்த காலாண்டிலும் இந்த நாட்டு வளர்ச்சி 0.4 விழுக்காடு குறைந்திருந்தது. கொரோனாவுக்கு பிறகு 2021,2022 காலகட்டத்தில் கிட்டத்தட்ட 5 விழுக்காடு வளர்ச்சியை காட்டிய நெதர்லாந்து தற்போது தடுமாறி வருகிறது.பெருந்தொற்று நேரத்துக்கு பிறகு மக்கள் பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர். பின்னர் விலைவாசி உயர்வால் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது.வாடிக்கையாளர்கள் செலவு செய்யும் விகிதம் 1.6 விழுக்காடாக சரிந்தது. அந்நாட்டு ஏற்றுமதி வெறும் 0.7 விழுக்காடாக குறைந்தது. இது கடந்த காலாண்டைவிடவும் குறைவான அளவாகும். அந்த நாட்டில் விலைவாசி உயர்வு என்பது 14.5 விழுக்காடாக கடந்தாண்டு செப்டம்பரில் இருந்தது.தற்போது விலைவாசி உயர்வு மக்களை வாட்டிவதைக்கிறது. பணவீக்கம் இந்தாண்டு இரண்டாவது காலாண்டில் 6 விழுக்காடாக குறைந்தபோதிலும் மக்களின் பாதகம் குறையவில்லை. பொருளாதார மந்த நிலையால் அந்த நாட்டு மக்கள் தவித்து வரும் நிலையில் பல நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கும் தயாராகும் சூழல் உருவாகி வருகிறது.உலகின் மகிழ்ச்சியான மக்களுக்கு நேரிட்ட துயர நிலை உலகளவில் அரசியல் பார்வையாளர்களால் மிகவும் கவனமாக உற்றுநோக்கப்படுகிறது.