7 ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல்..
மத்திய அமைச்சரவை கூட்டம் எல்லா வாரங்களிலும் புதன்கிழமைகளில் கூடி முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிப்பது வழக்கம். இந்த நிலையில் இந்த வாரத்துக்கான கூட்டமும் வழக்கம்போல நடைபெற்றது. அதில் 32,500 கோடி ரூபாய் அளவுள்ள ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டங்கள் 2,339 கிலோமீட்டர் தூர ரயில் பாதையை மேலும் வலுவாக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் ரயில்வே வருவாயும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பல உருமாற்றங்களை இந்த ரயில்வே திட்டங்கள் நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் இயக்கம், ரயில்களின் சிக்கல் நிலைகளை சீரமைக்க உதவும் என்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம்,பீகார்,தெலங்கானா,குஜராத்,ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் இந்த ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன.