ரயில்வே துறை பங்குகளை விற்க முடிவு…
உலகிலேயே அதிகம் மக்கள் தொகை கொண்ட நாடு மட்டுமல்ல, உலகிலேயே அதிக சிக்கலான ரயில் நெட்வொர்க் கொண்ட நாடாகவும் இந்தியா உள்ளது.இந்த நிலையில் ரயில்வேயின் சில நிதி நிறுவனத்தையே விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.பொதுத்துறையில் உள்ள ரயில்வேயில் உள்ள சில நஷ்டங்களை சரிசெய்ய சில இலக்குகளை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்குகளை எட்டுவதற்காக சில நிதி நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு விற்க இருக்கிறது. இந்திய ரயில்வே நிதி அமைப்பான ஐஆர்எப்சியின் பங்குகளில் 86விழுக்காடு மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. எவ்வளவு பங்குகளை விற்க வேண்டும் என்பதை அரசாங்கம்தான் முடிவு செய்யும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல துறைகளில் மொத்தமாக 11 விழுக்காடு பங்குகள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில்தான்,ரயில்விகாஸ் நிகாம் லிமிட்டட் நிறுவனத்தின் 5விழுக்காடு பங்குகளை மத்திய அரசு விற்றது.இதன் மூலம் 123.66 பில்லியன் ரூபாய் பணம் கிடைத்திருக்கிறது. 510 பில்லியன் இலக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் 2024 நிதியாண்டில் இதுவரை 56 பில்லியன் அளவுக்கு மட்டுமே விற்பனை செய்துள்ளது.இந்திய பங்குச்சந்தை விதிகளுக்கு உட்பட்டு இந்த பங்குகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 4 வாரங்களில் மட்டும் ஐஆர் எப்சி நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 58விழுக்காடு விலையேற்றம் கண்டுள்ளன. இந்திய பங்குச்சந்தைகளில் ஆகஸ்ட் 16ஆம் தேதி புதன்கிழமை பகல் 1-42 மணி வரை ஒரு பங்கின் விலை 51.55 ரூபாயாக இருக்கிறது.இது முன்தின விலையை விட 1 விழுக்காடு அதிதமாகும்.