பெரிய சரிவில் சந்தைகள்..!!
பங்குச்சந்தைகளில் கடந்த 2 நாட்களாக நிலவிய நிலை இன்று தலைகீழாக மாறியுள்ளது. ஆகஸ்ட் 17 ஆம் தேதி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 388 புள்ளிகள் சரிந்து 65,151 புள்ளிகளாகவும்,தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 99 புள்ளிகள் சரிந்து 19,365 புள்ளிகளாகவும் முடிவுற்றது. சந்தைகள் இயல்பாக தொடங்கினாலும் ஒரு கட்டத்தில் சரிவை சமாளிக்க இயலவில்லை. ITC, LTIMindtree, Divis Lab, Power Grid, Reliance Industries உள்ளிட்ட நிறுவன பங்குகள் பெரிய சரிவை சந்தித்தன.Adani Ports, Titan Company, Adani Enterprises, Bajaj Auto உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் குறிப்பிட்ட லாபத்தை பதிவு செய்தன. பொதுத்துறை வங்கிகளைத் தவிர்த்து மற்ற பங்குகள் அனைத்தும் சிவப்பு நிறத்தில் முடிந்தன. எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை பங்குகள்,ஆற்றல், சந்தையில் விற்கப்படும் தினசரி பொருட்கள் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் 0.3 முதல் 0.9 விழுக்காடு வரை சரிவை சந்தித்தன. Ajanta Pharma,Tribhovandas Bhimji Zaveri, SML Isuzu, Saksoft, Praj Industries, Patel Engineering, Lupin, Jyothy Labs, Jammu & Kashmir Bank, IDFC First Bank, Gravita India, Force Motors, Escorts Kubota, D B Realty உள்ளிட்ட 200க்கும் அதிகமான பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 312 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 648 ரூபாயாக வீழ்ச்சி கண்டது. ஒரு கிராம் தங்கம் 39 ரூபாய் குறைந்து 5456 ரூபாயாக விற்பனையானது.வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 75 ரூபாய் 70 காசுகளாக விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 75 ஆயிரத்து 700 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இங்கே கூறியுள்ள விலைகள் ஆகஸ்ட் 17ஆம் தேதி சந்தையில் உள்ள நிலவரம் மட்டுமே, இதனுடன் 3 விழுக்காடு கட்டாயம் ஜிஎஸ்டி சேர்க்க வேண்டும், மேலும் செய்கூலி,சேதாரம் என அதுவும் தனியாக சேர்க்கவேண்டும்,ஜிஎஸ்டி போல எல்லா கடைகளிலும் 3 விழுக்காடு செய்கூலி சேதாரம் இருக்காது, ஒரு கடையில் 8 விழுக்காடு இருக்கும் மற்றொரு கடையில் அதற்கும் அதிகமாகக் கூட இருக்கலாம். உங்களுக்கு கைராசியான கடையில், தரமான நகைகளை குறைவான செய்கூலி,சேதாரத்தில் வாங்குவதுதான் மிகுந்த புத்திசாலித்தனமான யோசனையாகும் என்பதை மறக்காதீர்கள்.