இ-பைக் வைத்திருக்கிறீர்களா? ஒரு நிமிடம் !!!
இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்த ஓலா,ஏதர்,டிவிஎஸ் மோட்டார்ஸ்,ஹிரோ மோட்டார்கார்ப்உள்ளிட்ட 4 நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து சார்ஜருக்கும் தனியாக பில்போட்டதாக புகார்கள் எழுந்தன. இதை அரசாங்கம் விசாரித்தது. விசாரித்ததில் நிறுவனங்கள் விதிமீறியது அம்பலமானது. உடனடியாக சார்ஜருக்கு வாங்கிய பணத்தை திரும்ப அளிக்க நிறுவனங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டது. இதையடுத்து வாடிக்கையாளர்களுக்கு 305 கோடி ரூபாய் திரும்ப அளிப்பதாக இந்த 4 நிறுவனங்களும் உறுதியளித்தன.இதையடுத்து ஏதர் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 157.78 கோடியும்,ஓலா எலெக்ட்ரிக் 130 கோடி ரூபாயும்,டிவிஸ் நிறுவனம் 15.6 கோடியும்,ஹிரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2.26 கோடி ரூபாயும் தர இசைவு தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஓலா நிறுவனம் 4.25 கோடியும்,ஏதர் நிறுவனம் 3.97 கோடி ரூபாயும்,ஹீரோ மோட்டோகார்ப் 1.64 கோடிரூபாயும்,டிவிஎஸ் நிறுவனம் வெறும் 9 லட்சம் ரூபாயும் மட்டுமே வாடிக்கையாளர்களிடம் வசூலித்த பணத்தை திரும்ப அளித்துள்ளன. ஒன்றரை லட்சம் ரூபாய்க்கும் குறைவான வாகனங்களுக்கு மத்திய அரசு மானியமும் அளித்து வருகிறது. பணத்தை திரும்ப அளிக்க வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக்கணக்குகளை தரவில்லை,அதனால்தான் எங்களால் ரீஃபன்ட் செய்ய முடியவில்லை என்று இந்த 4 நிறுவனங்களும் சாக்கு போக்கு சொல்கின்றனர்.வரும் நாட்களில் ரீஃபண்ட்களை துரிதப்படுத்த இருப்பதாக அந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.