உணவு, எரிபொருள் விலையை குறைக்க நடவடிக்கை..!!!
இந்திய அதிகாரிகள் பட்ஜெட்டில் இருந்து 12 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நிதியை பல்வேறு அமைச்சகங்களுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளனர்.உணவு மற்றும் எரிபொருள் விலையை கட்டுப்படுத்த இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் உற்பத்தியாகும் பெட்ரோலுக்கு வரியை குறைக்கவும்,சமையல் எண்ணெய் இறக்குமதியை எளிமையாக்கவும், கோதுமை விலையை குறைப்பது குறித்தும் பிரதமர் மோடி இறுதி முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு இதே பாணியில் 26 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நிதியை மத்திய அரசு அட்ஜஸ்ட் செய்தது.இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான HP,indian oil, bharat petroliumஆகிய நிறுவனங்கள் பெரிய இழப்புகளில் இருந்து மீண்டுவந்துள்ளன. 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உயர்ந்துள்ள நிலையில் இதனை செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டை எப்போதும் உலக நாடுகள் கவனமாக பார்த்து வருகின்றன.தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் சூழலில் இந்த நிதி ஒதுக்கீடு கவனம் பெற்றுள்ளது.
வெங்காயம் தக்காளி விலையை கட்டுப்படுத்துவது குறித்தும்அ அறிவிப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பருவம் தவறிய மழையால் சல வாரங்களுக்கு முன்பு தக்காளி கிலோ 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் வருங்காலங்களில் வெங்காயத்தின் விலையும் உயர வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில் நிதி ஒதுக்கீடு மிகமுக்கிய கவனம் பெற்றுள்ளது.