கார்கள் விலை குறைய வாய்ப்பு!!!.
இந்தியாவிற்கும் பிரிட்டனுக்குமான பந்தம் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.இந்த இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தங்களை செய்து வருகின்றன. அடுத்தாண்டு இரண்டு நாடுகளும் பொதுத்தேர்தலை சந்திக்கின்றன. பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மற்றும் கார்களின் மீதான வரியை குறைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய பணியாளர்களுக்கு விசாக்களில் புதிய விதிகள் அமலாக இருக்கின்றன. இந்திய பிரதமர் மோடியும்,பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் இணைந்து இருநாடுகளுக்கும் இடேயையான வர்த்தகத்தை தற்போதுள்ள நிலையில் இருந்து 2030ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளனர். உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரெக்சிட் ஒப்பந்தத்தை அடுத்து அதன் பலன்களை பிரிட்டன் பெறுவது எப்படி என்று ரிஷி சுனக் ஆராய்ந்து வருகிறார்.
மோடியும் சுனக்கும் வரும் மாதம் டெல்லியில் ஜி20 கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.இந்தியாவில் இருந்து தற்போது வரை பிரிட்டனுக்கு சுமார் 6 லட்சம் பேருக்கு விசா அளிக்கப்படுகிறது. சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இருநாடுகளும் இசைவு தெரிவித்துள்ளனர். தற்போது வரை 100%ஆக உள்ள கார்களின் இறக்குமதி வரி விரைவில் 75% ஆக குறைய இருக்கிறது. பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வரியின் அளவு 150-இல் இருந்து 100%ஆக குறைய இருக்கிறது. முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.