சீனாவின் நிழல் வங்கி பயங்கரம் தெரியுமா…?
அமெரிக்காவில் அண்மையில் வங்கிகள் திவாலானது போலவே சீனாவிலும் புகழ் பெற்ற ஒரு நிறுவனத்தின் வீழ்ச்சியால் அந்நாட்டு பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. zhongzhi என்டர்பிரைசர்ஸ் என்ற அந்த நிறுவனத்தின் மீது பொதுமக்கள் மற்றும் நிதி முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருவதால் அதன் நிலைமை ஆட்டம் கண்டு வருகிறது. வங்கிகள் போல இயங்கிவந்த இந்த நிறுவனம் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு தர வேண்டிய பணத்தை தரவில்லை என்று புகார் எழுந்துள்ளது. நிலைமை கையை மீறி சென்றதை அடுத்து kpmg நிறுவனத்தை சாங்க்சி நிறுவனம் அனுகியுள்ளது.
இந்த நிதி நிறுவனம் வீழ்ந்ததால் சீன யுவான் பணத்தின் மதிப்பு 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது.இந்த நிறுவனத்தை மீட்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தனக்கு சொந்தமான இடங்களை விற்கும் அளவுக்கு அழுத்தம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சீன பங்குச்சந்தைகளில் சாங்க்சி நிறுவனத்தின் பங்குகள் மோசமாக சரிந்தன.சீனாவில் ரியல் எஸ்டேட் மற்றும் அனைத்து தரப்பு பொருளாதார நடவடிக்கைகளும் வீழ்ச்சியை கண்டுள்ள நிலையில்,நிழல் நிதி நிறுவனமாக இருந்து வந்த நிறுவனம் திவாலாகும் சூழல் இருப்பது அந்நாட்டு பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 1995ஆம் ஆண்டு xie என்பவரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் ,அவர் 2021ஆம் ஆண்டு அவர் மறைந்ததும் பெரிய சிக்கல்களை சந்தித்து வருகிறது.எவ்வளவு பேருக்கு இன்னும் பணம் தர வேண்டியுள்ளது என்று கேபிஎம்ஜி நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. ரியல் எஸ்டேட்டில் போட்ட பணம் அந்நாட்டில் நிலவும் மந்த நிலை காரணமாக திரும்ப எடுக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.சீனாவில் குறிப்பிட்ட இந்த நிறுவனத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.