ரூ. 3.65 கோடிக்கு எலுமிச்சை பழம்!!!..
மசேராட்டி என்ற கார் நிறுவனம் இந்தியாவில் எம்சி20 என்ற புதிய ரக காரை 2021ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த கார் மணிக்கு 325 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த காரை பெரிய பணக்காரர்களில் ஒருவரான கவுதம் சிங்கானியா வாங்கினார்.இந்த காரை மும்பை வீதிகளில் ஓட்டாமல்,தனது கராஜில் தூங்குவதாக கூறியுள்ளார். மேலும் மசேராட்டி காரை வாங்க பணம் செலுத்திய தமக்கு எலுமிச்சை பழம் மட்டுமே கிடைத்திருப்பதாகவும் கவுதம் விமர்சித்துள்ளார். இந்த கார் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள கவுதம்,இந்த கார் மிகவும் ஆபத்தான கார் என்று தெரிவித்துள்ளார். தனது வாழ்நாளில் இப்படி ஒரு மோசமான காரை ஓட்டியதே இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.குறிப்பிட்ட இந்த மாடல் காரின் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள மசேராட்டி கார் நிறுவனம்,தீவிரமான தரக் கட்டுப்பாடுகள், பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக கூறியுள்ளது. கவுதம் கூறிய தொழில்நுட்ப பழுதை சரிசெய்யும் பணிகளை செய்து வருவதாகவும் அந்த கார் நிறுவனம் விளக்கமளித்துள்ளது