அதை தொட்டதே இல்ல…சொல்கிறார் பிரபலம்…
HCL என்ற நிறுவனம் இன்று பெரிய சாம்ராஜ்ஜியத்தை வைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை பதவியை ரோஷ்னி நாடார் அலங்கரிக்கிறார். இவர் தனது எம்பிஏ படிக்கும் வரை எக்சல் ஷீட்களை தொட்டதே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் பங்கேற்ற ரோஷ்னி,அமெரிக்காவில் உள்ள கெலாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்டில் அவர் எம்பிஏ படித்தது குறித்து பசுமையான நினைவுகளை அசைபோட்டார். தனக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை என்று கூறிய ரோஷ்னி, தனது பெற்றோர்தான் சிறந்த வழிகாட்டிகளாக இருந்ததாக கூறினார். எச்சிஎல் நிறுவனம் செய்து வரும் நல்ல காரியங்களை வைத்து பெருமை கொள்வதாக கூறியுள்ள ரோஷ்னி,தாம் முதன்முதலில் நிதித்துறையில் எச்சிஎல்லில் பணியாற்றியதாக கூறினார். ஷிவ்நாடாரால் உருவாக்கப்பட்ட எச்சிஎல் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ரோஷ்னி 28 வயதிலேயே ஏற்றுக்கொண்டார். அதுகுறித்தும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ரோஷ்னி தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார். 2009 ஆம் ஆண்டு எச்சிஎல் நிறுவனத்தின் சிஇஓவாக ரோஷ்னி நியமிக்கப்பட்டார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.