மின்சார கார் இல்லை..!!! குப்பைத் தொட்டி…
கொஞ்ச நேரம் சார்ஜ் போட்டால் இத்தனை கிலோமீட்டர் போகும் அத்தனை கிலோமீட்டர் போகும் என்று நிறுவனங்கள் மின்சார கார் நிறுவனங்கள் விளம்பரப்படுத்துகின்றன. இதனை நம்பி பலரும் கார்களை வாங்கி விடுகின்றனர். ஆனால் நிறுவனம் சொன்ன அளவுக்கு கார்கள் செல்லாததால் வாங்கியவர்கள் குழப்பமடைவதுடன் யாரிடம் சொல்வது என்று புரியாமல் தவிக்கின்றனர். இப்படி ஒரு சம்பவம்தான் காசியாபாத்தில் நடந்துள்ளது. மகிந்திரா xuv400 ரக காரை வாங்கிய நபர் தனது கார் போதுமான அளவு தூரம் செல்லவில்லை என்று கூறி அந்த காரை குப்பைத்தொட்டியாக பயன்படுத்துவதாக மகிந்திரா ஷோரூம் வாசலிலேயே நிறுத்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். 300 முதல் 350 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் என்று அறிவிக்கப்பட்ட கார் 150 கிலோமீட்டர் கூட செல்லவில்லை என்றும் யாரும் குறிப்பிட்ட இந்த வகை மின்சார கார்களை வாங்கவேண்டாம் என்றும் அந்த நபர் செய்தியாளர்களிடம் சொல்லியதுடன் பேனரும் அடித்து காரின் மீது ஒட்டியுள்ளார்.
மகிந்திராவின் Xuv 400 ரக மின்சார கார்கள் போதுமான அளவுக்கு வேலை செய்யவில்லை என்று புகார் வருவது இது முதல்முறையல்ல.மகிந்திரா ஷோரூம் வாசலிலேயே இப்படி கலாட்டா செய்த பல கதைகள் அவ்வப்போது வெளிச்சத்துக்கு வந்தபடியே இருக்கிறது. இதனை குறிப்பிட்ட நிறுவனம் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்