அந்த திட்டம் இப்போது இல்லை!!…
தூதரக ரீதியில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் நெருங்கிய தொடர்பு எப்போதும் நல்லபடியாகவே இருக்கிறது. இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் ஏதும் இந்தியாவிடம் இல்லை என்று மத்திய உணவுத்துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்கனவே நொய் அரிசி, பாஸ்மதி அல்லாத அரிசி வகைகள் ஏற்றுமதி செய்யத் தடை உள்ளது.இந்நிலையில் புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு தடை ஏதும் இல்லை என்று சஞ்சீவ் தெரிவித்துள்ளார். இப்போது வரை புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு எந்த தடையும் இல்லை என்று தெரிவித்துள்ள அவர்,இது இந்திய ஏற்றுமதி அளவில் 3ஆவது இடத்தில் உள்ளது என்றார். ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் மத்திய அரசு கோதுமையை வாங்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு மத்திய அரசு தற்போது விளக்கமளித்துள்ளது.
ஆகஸ்ட் 1ஆம் தேதி வரையுள்ள நிலவரப்படி அரசு தானியக்கிடங்குகளில் 2கோடியே 83 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கையிருப்பு உள்ளது.இது கடந்த 10ஆண்டுகளின் சராசரியைவிட 20% குறைவு என்கிறது புள்ளிவிவரம்.