30,000 பேர் வேலைக்கு வேண்டும்!!!!..
இந்தியாவில் மிகப்பிரபலமான நிறுவனங்களில் L&Tயும் ஒன்று. இந்த நிறுவனத்தில் திறமையான 30,000 பணியாளர்கள் தேவைப்படுவதாகவும்,ஆனால் சரியான நபர்களை தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்துவதில் மிகப்பெரிய தடுமாற்றம் இருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இந்திய பணியாளர்கள் திறமையில் குறைவாக இருப்பதாகவும் அவர்கள் திறமையை வளர்க்கவேண்டிய தேவை இருப்பதாகவும் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். நவீன நுட்பங்கள் மற்றும் ஆட்டோமேஷன் துறைகளில் எல்அன்ட் டி கவனம் செலுத்துவதாக சுப்ரமணியம் கூறியுள்ளார். போதுமான பணியாளர்கள் இல்லாததால் 50 பில்லியன் அமெரிக்கடாலர் அளவுக்கு பாதிப்பு நேரிடுவதாகவும் கூறினார். கார்பென்டர் தொழில், மேஸ்திரிகள் ,கனரக வாகனங்களை இயக்கும் துறைகளில் போதுமான பயிற்சி இந்திய பணியாளர்களுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்துத்துறைகளிலும் திறமைகளை வளர்க்க வேண்டிய தேவை உள்ளதாக லிங்க்டு இன் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டது.82 விழுக்காடு மக்கள் தங்கள் நிறுவனங்களுக்கு திறமையான பணியாளர்களை வேலைக்கு எடுக்கவே விரும்பவதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் யூரியா தயாரிப்பு ஆலைக்கான பணிகளை செய்யும் ஆணையை எல்அன்டுடி நிறுவனம் பெற்றுள்ள நிலையில் அந்நிறுவனம் இப்படி தெரிவித்துள்ளது.