“அதிக ரிட்டர்ன்ஸ் இருந்தா கொடுத்துடுங்க இல்லன்னா நோட்டீஸ் வருமாம்”
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது என்பது முன்பு இருந்ததைப்போல இல்லாமல் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது.துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இப்படி அவசர அவசரமாக தாக்கல் செய்து அதற்கான ரிட்டர்ன்ஸ் கிடைப்பதும் வேகப்படுத்தியுள்ளது. இதனால் தாக்கல்செய்யப்படும் வருமான வரியில் உள்ள பிழைகளை திருத்திக்கொள்வது என்பது இயலாத காரியமாக மாறி வருகிறது. வருமான வரி வரம்பில் உள்ள ஒரு நபர் தனக்கு கிடைத்த வருமானத்தை வரியாக செலுத்த வாய்ப்பிருந்தும் அவர் வரி செலுத்தாமல் விட்டிருந்தாலோ ,அல்லது ரிட்டன்ஸ் அதிகம் பெற்றிருந்தாலோ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?. இப்படியான சிக்கல் உள்ள தனிநபர்கள் ரிவைஸ்டு ITR எனப்படும் திருத்தப்பட்ட ITR தாக்கல் செய்ய வேண்டும்.வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வருவதற்குள் இதனை செய்ய வேண்டும். நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற பிறகு அதனை தாக்கல் செய்வது என்பது இயலாதததாக மாறிவிடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.வருமான வரி விதிப் பிரிவு, 143(3), 147அல்லது 144 விதிப்படி இதற்கான அதிகாரி உங்களுக்கு நோட்டீஸ் அளிக்க முடியும்.வரி செலுத்த தகுதி இருந்தும் அதனை மறைத்து அதிக ரிட்டர்ன்ஸ் நீங்கள் பெற்றிருந்தால் அதற்கான அபராதமும் வசூலிக்கப்படும். திருத்தப்பட்ட ITR தாக்கல் செய்தாலும் அபராதம் இருக்கும் ஆனால் பெரிய அளவுக்கு இருக்காது.
விதி எண் 234D பிரிவின்படி அதிக ரிட்டன்களை பெறும் வட்டி 0.5%ஆக இருக்கும். இதனை மின்னணு முறையிலேயே செய்துகொள்ள இயலும். அதிக டேக்ஸ் ரீஃபண்ட் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? அதிகப்படியான டேக்ஸ் ரீபண்ட் பெற்றிருந்தால் அதனை திரும்ப செலுத்திவிட வேண்டும் என்றும்,இதனை வருமான வரித்துறை கண்டுபிடித்தால்,வருமானத்தை மறைத்த பிரிவில் நடவடிக்கை எடுக்க முடியும், அப்படி கண்டுபிடித்தால் 200%அபராதம் விதிக்கவும் வாய்ப்புள்ளது. சில நேரங்களில் கைது நடவடிக்கையையும் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.