ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளால் பாதிக்கப்படும் HDFC!!!
அண்மையில் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில் ரெபோ வட்டி விகிதத்தில் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை.இந்நிலையில் கையிருப்பில் உள்ள பணத்தை செலவிடும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. குறிப்பாக பணவீக்கம் அதிகம் இருக்கும் சூழலில் நிதி சார்ந்த திட்டங்களும் வகுக்ககப்பட்டன. அதாவது வங்கிகளிடம் இருக்கும் பணத்தை மக்களிடம் புழக்கத்தில் விட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த அறிவிப்பின் காரணமாக கடந்த 22ஆம் தேதி நிஃப்டி வங்கித்துறை பங்குகள் கணிசமாக வீழ்ந்தன. இதில் அதிகபாதிப்பை சந்தித்தது HDFC வங்கி நிறுவனம்தான். இந்த வங்கி 4% சரிவை சந்தித்தது.வழக்கமாக குறைவான வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன் வழங்குவதில் பிரபலமாக திகழும் HDFC வங்கிக்கு தற்போது முதலீடுகள் தேவை அதிகரித்துள்ளது. அதிக பணம் HDFC வங்கியில் இருந்து வெளியேறுவதால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்தனர். நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC வங்கியில் நிதிதான் பெரிய ரிஸ்க் என்றும், HDFC மற்றும் HDFCவங்கி ஆகியவை இணைத்தது சிக்கலாகிவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இரண்டு நிறுவனங்களையும் இணைத்ததன்காரணமாக டெபாசிட் குறைந்துள்ளதுடன், கடன் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. HDFC நிறுவனத்தின் NIM நிகர வட்டி மார்ஜின் அளவு ஆபத்தில் இருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். அதிகரிக்கும் போட்டி, முதலீடுகளை வேறுபக்கம் மாற்றியது உள்ளிட்ட காரணிகளால் HDFC நிறுவனத்துக்கு தற்போது அழுத்தம் அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். HDFC நிறுவனத்தின் 2ஆவது காலாண்டு முடிவுகள் அக்டோபர் இரண்டாவது பாதியில் வெளியிட வாய்ப்பிருப்பதாக HDFCநிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சசிதர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.