எந்த திட்டமும் இல்லையாம்!!!
உலகளவில் செமி கண்டக்டர்கள் உற்பத்தியில் பல ஆண்டுகளாக முன்னோடியாக திகழும் நிறுவனமாக இண்டெல் இருக்கிறது.இந்த நிறுவனம் இந்தியாவில் செமிகண்டக்டர்கள் உற்பத்தியை தொடங்குமா என்று கேட்ட கேள்விக்குத்தான் இப்படி ஒரு பதில் கிடைத்திருக்கிறது. இப்போது அல்ல,இன்னும் கொஞ்சம் காலம் கழித்து வேண்டுமானால் யோசிக்கலாம் என்ற மனநிலையில் தான் அந்த நிறுவனம் இருப்பதாக தெரிகிறது. இந்தியாவில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இந்தியாவில் செமிகண்டக்டர்கள் உற்பத்திக்கு திட்டம் வகுக்ககப்பட்டு வருகிறது.தைவான் செமிகண்டக்டர்உற்பத்தி நிறுவனமான TSMC,சாம்சங் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் செமிகண்டக்டர்கள் உற்பத்தி செய்ய இருக்கின்றன.
இன்டெல் நிறுவனத்தின் பொது மேலாளரான ஸ்டீவ் லாங்,அண்மையில் மலேசியாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இப்படி தெரிவித்துள்ளார். இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை என்றும் வருங்காலத்தில் வாய்ப்பிருந்தால் தயாரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் தற்போது மலேசியாவில் இருக்கும் சூழல் என்பது ஓர் இரவில் வந்துவிடவில்லை என்றும்,அரைநூற்றாண்டுக்கு முன்பு செய்த பணிகள்தான் தற்போது செயல்பட்டு வருவதாகவும் ஸ்டீவ் கூறுகிறார். இந்தியாவில் சிப் உற்பத்தி தொடங்கினால் ஆதரவளிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கடந்தாண்டு செய்தியாளர்களை சந்திக்கையில் இண்டெல் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார். ஆனால் இந்தியாவில்உற்பத்தியை தாங்கள் தொடங்கப்போவதில்லை என்று இன்டெல் அதிகாரி கூறுகிறார். இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதே பலநாடுகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.