அசுர வளர்ச்சி பெற்ற வியட்நாம் நிறுவனம்..!!!
வியட்நாமைச் சேர்ந்த மின்சார் கார் தயாரிப்பு நிறுவனமாக இருப்பது வின்ஃபாஸ்ட். இந்நிறுவனம் தங்கள் உள்நாட்டு சந்தையில் 109% பங்குகள் அதிகரித்துள்ளன.மேலும் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாக பெற்றுள்ளது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி சந்தையில் அறிமுகமான இந்த பங்கு, மதிப்பு 251% உயர்ந்துள்ளது. 84பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருக்கிறது. இது ஜெனரல் மோட்டர்ஸ் மற்றும் போர்ட் நிறுவன சந்தை மதிப்புகளை விட குறுகிய காலத்தில் வளர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் 19 மில்லியன் பங்குகள் கைமாறியுள்ளன. ஒரு பங்கு 20 டாலரில் இருந்து 35 டாலராக உயர்ந்திருக்கிறது.பம் நாத் வுயூங்க் என்பவர் இந்த நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். சந்தையில் 1.3 மில்லியன் பங்குகள் இன்னும் வணிகமாகிக்கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கணிசமாக உயர்ந்திருப்பதால் அதன் உரிமையாளர் Pham Nhat Vuong-ன் சொத்து மதிப்பை 21.2 பில்லியன் டாலரில் இருந்து 43.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தியுள்ளது. குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் இந்த நிறுவனத்தின் கார்கள் பற்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் தேடத் தொடங்கியிருக்கின்றனர். அப்படி என்னதான் இருக்கிறது இந்த நிறுவன மின்சார கார்களில் என்று தேடுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.