புதிய தோற்றத்தில் வருமானவரி வெப்சைட்!!!!
வருமான வரித்துறைக்கான புதிய மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.இந்த புதிய இணையதளத்தில் மதிப்பு கூட்டப்பட்ட வசதிகள், புதிய மாடியூல்கள், ஆகியவற்றை உதய்ப்பூரில் நடந்த சிந்தன் ஷிவிர் நிகழ்ச்சியில் CBDTதலைவரான நிதின் குப்தா வெளியிட்டார். வரிசெலுத்துவோருக்கு வசதியாக புதிய இணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், மொபைல்களிலும் அழகாக தோற்றமளிக்கும் வகையில் வெப்சைட் மாற்றப்பட்டுள்ளதாகவும் மத்திய நேரடி வரிகள் ஆணையம் கூறியுள்ளது. இதில் இடம்பிடித்துள்ள புதிய அம்சங்கள் எப்படி இயங்கும் என்று புதிய தெளிவான விளக்க வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.புதிய சட்டங்கள்,பிரிவுகள்,விதிகள் மற்றும் வரி ஒப்பந்தங்கள் எளிதாக புரியும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. எதுவெல்லாம் கடைசி நாள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த புதிய இணையதளத்தில் இடம்பிடித்துள்ளன. உதாரணமாக மிகமுக்கியமான நாட்கள் குறித்த கவுண்ட்டவுன் வரும் வசதி, முக்கியமான இணைப்புகள் வரி செலுத்துவோரின் வசதிக்காக எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. வரி செலுத்துவோருக்கு எளிதில் புரியவைக்கும் வகையில் கற்பித்தல் வீடியோக்கள், மற்றும் தகவல்கள் புதிய இணையதளத்தில் இடம்பிடித்துள்ளன. www.incometaxindia.gov.in என்ற பக்கத்தில் யார் வேண்டுமானாலும் புதிய அம்சங்களை பார்க்கும் வகையில் இந்த வெப்சைட் வடிவமைக்கப்பட்டுள்ளது.