சுமாராக முடிந்த சந்தைகள்
ஆகஸ்ட் 29ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய அளவு மாற்றம் காணப்படவில்லை. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 79 புள்ளிகள் உயர்ந்து 65 ஆயிரத்து75 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36 புள்ளிகள் உயர்ந்தும் வர்த்தகம் நிறைவடைந்தது. தொடக்கத்தில் சிறப்பாக தொடங்கிய சந்தைகள் பின்னர் சரிந்தன.UPL, Hindalco Industries, Adani Ports, Tata Steel, Hero MotoCorp உள்ளிட்ட நிறுவனங்கள் தேசிய பங்குச்சந்தையில் உயர்ந்தன.Bharti Airtel, HUL, Axis Bank, Dr Reddy’s Laboratories,Reliance Industrie உள்ளிட்ட நிறுவன பங்குகள் பெரிதாக சரிந்தன. உலோகம்,ஆற்றல் துறை பங்குகள் தலா 1 விழுக்காடு உயர்ந்து முடிந்தன. பொதுத்துறை வங்கிகள்,மருந்து நிறுவன பங்குகள் சரிந்தன.Genus Power Infrastructures, Venus Pipes & Tubes, Raymond, KPI Green Energy, Berger Paints, Mangalore Refinery & Petrochemicals, Jubilant Pharmova, TV18 Broadcast, Graphite India உள்ளிட்ட நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டன. தங்கம் விலையும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 44,000 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் முன் தின விலையை விட 20 ரூபாய் அதிகரித்து 5500ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து 80 ரூபாய் 20 காசுகளாக உயர்ந்திருக்கிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 200ரூபாய் அதிகரித்து 80 ஆயிரத்து 200 ரூபாயாக விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் கட்டாயம் 3 % ஜிஎஸ்டியும், செய்கூலி,சேதாரமும் சேர்க்கவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.