சமையல் கேஸ் விலை குறைகிறது?
இந்தியாவில் ஏதோ ஒரு பொருள் விலை திடீரென குறைகிறது என்றால் யோசிக்கவே தேவையில்லை , தேர்தல் வருகிறது என்று பொருள். இதேபோலத்தான் ஒரு அண்மை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது மத்திய அமைச்சரவை புதிதாக ஒரு ஒப்புதலை அளித்திருக்கிறது அது என்னவெனில் உஜ்வாலா திட்டத்தில் சிலிண்டர் வாங்கியிருந்தால் அவர்களுக்கு மானியமாக 400 ரூபாயாகவும், சாதாராண சிலிண்டராக இருந்தால் அவர்களுக்கு மானியமாக 200 ரூபாயும் அளிக்க முடிவு செய்திருப்பதே அந்த ஒப்புதல். பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளார். 2024 நிதியாண்டுக்கான சமையல் எரிவாயு மானியம் என்பதற்கான கூடுதல் செலவாக 7,680 கோடி ரூபாயை மத்திய அரசே ஏற்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது ஆயிரத்து 100 ரூபாய் என்ற அளவில் இருப்பதால் இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர். தற்போது வரை மானியம் வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. தற்போது வரை ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் அளிக்கப்பட்டு வருகிறது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசே கடந்த மே 2022 முதல் மானியமாக அளித்து வருவதாக கூறியுள்ளது. கிராமபுறங்களிலும் சமையல் எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க கடந்த 2016ஆம் ஆண்டு உஜ்வாலா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதற்கான மானியமும் வாடிக்கையாளர்கள் வங்கிக்கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த புதிய அறிவிப்பின் மூலம் கிராமபுறங்களில் 2016ஆம் ஆண்டுக்குபிறகு சமையல் எரிவாயு இணைப்பு வாங்கியிருந்தால் அவர்களுக்கு இனி மாதந்தோறும் 200 ரூபாய்க்கு பதிலாக 400 ரூபாய் வரும் என்று அறிவித்திருக்கிறார்கள் எவ்வளவு வரும் என்பதை காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.ஒரு வேளை இதுவும் அந்த 15 லட்சம் ரூபாய் போல ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்பதே சில இணையவாசிகளின் கருத்தாகவும் இருக்கிறது.