700% வளர்ச்சி கண்ட நிறுவனம்..
உலகின் 3ஆவது அதிக மதிப்பு மிக்க மின்சார கார் நிறுவனமாக வியட்னாமைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் மாறியிருக்கிறது. பொதுவெளிக்கு வந்த 2 வாரங்களில் 700%வளர்ச்சியை இந்த நிறுவனம் கண்டுள்ளது. டெஸ்லா, டொயோட்டா நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக இந்த நிறுவனம் வேகமாக வளர்ந்துள்ளது. திங்கட்கிழமை மட்டும் இந்த நிறுவன வளர்ச்சி 20% உயர்ந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் மட்டும் 190 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தின் மூலதனம் 111பில்லியனாகவும், போயிங் நிறுவனத்தின் மதிப்பு 137 பில்லியனாகவும் இருக்கிறது. திங்கட்கிழமை ஒரே நாளில் 33 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை பெற்றதன் மூலம் சந்தையில், டெஸ்லா, டொயோட்டாவுக்கு அடுத்த இடத்தில் வின்பாஸ்ட் நிறுவனம் இருக்கிறது. குறிப்பிட்ட இந்த நிறுவனம் முழுக்க முழுக்க தனிநபரான பாம்நாட்ஊயங் என்பவரால் நிர்வகிக்கப்படுகிறது. அவரிடம் மட்டும் 99.7% பங்குகள் உள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை எப்போதுவேண்டுமானாலும் தகர்ந்துபோகும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.10 வர்த்தக நாட்களில் மட்டும் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 200பில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்திருக்கிறது.இந்தஅளவை எட்ட டெஸ்லாவுக்கு 3,600 செஷன்களும், NVidia நிறுவனத்துக்கு 7,700 செஷன்களும் தேவைப்பட்டன. எந்த இலக்கும் இல்லாமல் தொடங்கப்பட்ட ஆரம்ப பங்கு மூலதனம்,அடுத்த 24 மாதங்களில் மெர்ஜர் எனப்படும் இணைப்பு செய்யப்படாதபட்சத்தில் திரட்டப்பட்ட பணம் மீண்டும் முதலீட்டாளர்களிடமே அளிக்கப்பட்டுவிடும். வடக்கு கரோலினாவில் இந்த நிறுவனம் கடந்த மாதம் புதிய ஆலையை தொடங்கியுள்ளது. இந்தாண்டு மட்டும் 45,000 முதல் 50,000 கார்களை உற்பத்தி செய்து விற்பனை தொடங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. சர்வதேச பங்குச்சந்தைகளில் 10 விழுக்காடு வரை திருத்தம் நடைபெறலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர். எனவே எச்சரிக்கையுடன் இதில் முதலீடு செய்வது நல்லது என்பதும் அவர்களின் ஆலோசனையாக இருக்கிறது.