புதிய விதிகள்..!!கவனம்!!!
அரும்பாடு பட்டு சம்பாதித்த பணத்தை PFகணக்கில் வைத்துக்கொண்டு அதனை எடுக்க முடியாமல் தவித்தது ஒரு காலம். தற்போது அதனை எளிமைப்படுத்த பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.பெயர், பிறந்த தேதி,பாலினம் உள்ளிட்ட அம்சங்களை எளிமையாக மாற்றும் அம்சம் தற்போது தயாராகி வருகிறது. கடந்த 23 ஆம் தேதி அந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கு புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. பெயர், பிறந்த தேதி,தந்தை பெயர், உறவு,திருமண நிலை,சேர்ந்த தேதி,வெளியேறியதற்கான காரணம்,வெளியேறிய தேதி மற்றும் ஆதார் எண் இணைப்பு உள்ளிட்ட 11 துறைகளுக்கு புதிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.மைனர் மற்றும் மேஜர் என்று இருவகைகளாக இந்த பணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. சிறிய மாறுதல்களுக்கு 2 ஆவணங்களும், பெரிய மாறுதல்களுக்கு 3 ஆவணங்களும் இனி தேவைப்படும். எந்தெந்த மாறுதல்கள் எத்தனை முறை செய்ய முடியும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாறுதல் செய்யப்பட்டால் அது எத்தனை நாளில் அமலாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எப்படி மாறுதல்களை செய்வது? உங்கள் PF கணக்கை திருத்த வேண்டுமானால் அதற்காக முதலில் யுஏஎன் எண் வேண்டும். கூட்டு ஒப்புதல் என்ற பிரிவு இருக்கும் அதில் விவரங்களை கொடுத்தால் ஓடிபி வரும். போதுமான ஆவணங்களை தாக்கல் செய்த பிறகு மாறுதல்கள் அமலாகும்.உரிய தரவுகள் இல்ல என்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே சரியான தரவுகள் இருக்கின்றனவா என்று ஆராய்வது EPFO கணக்கு வைத்திருப்போருக்கான கடமையாகும். இந்த மாறுதல்களில்,பிஎப் கணக்கில் பிறந்த தேதி மாறியிருந்தால், பிறப்பு சான்றிதழ்,ஆதார் மற்றும் பாஸ்போர்ட் எண்களை உள்ளீடு செய்யவேண்டும் உள்ளிட்ட நடைமுறைகளையும் PFO அறிவித்துள்ளது.