அம்பானி கம்பெனியில் வேலை வேணுமா?
இந்தியாவில் பெரிய வணிக சாம்ராஜ்ஜியத்தை ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி உருவாக்கியுள்ளார் அது மிகையல்ல. அவர் அண்மையில் ஜியோ ஃபைனான்ஸ் நிறுவனம் காப்பீட்டுத்துறையிலும் கால்பதிக்க இருப்பதாக அறிவித்தார். அந்த நிறுவனம் தற்போது பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளை பெற்று வருகிறது. காப்பீட்டுத்துறையில்,முன்னணியில் இருக்கும் நபர்களை தங்கள் நிறுவனத்தில் சேர்க்க பணிகளை செய்து வருகிறது. கோர்ன் பெரி, ஸ்பென்சர் ஸ்ட்ரூஉட் ஆகிய நிறுவனங்களுடன் இது குறித்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அடுத்தாண்டு தொடக்கத்திற்குள் தலைமை பதவிக்கான சரியான தேர்ந்தெடுக்கும் பணிகளை ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் முன்னெடுத்துள்ளது.
புதிய அதிகாரியை தேர்ந்தெடுக்கும் பணிகளை ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் காமத் மேற்பார்வை செய்து வருகிறார். புதிய நிறுவனத்தின் முதல் செட் பணியாளர்கள் நிறுவனத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் மிக முக்கியமானவர்கள் என்பதால் ஏற்கனவே அனுபவம் உள்ள பணியாளர்களை பணியில் சேர்க்க தீவிரம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைமைப்பதவிக்கு உகந்த நபரை உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருந்து தேர்வு செய்யும் பணிகளும் வேகமெடுத்துள்ளன.