உண்டியலை உடைத்த முதலீட்டாளர்கள்…
இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த 3 நாட்களாக நிலவி வந்தசாதமாகன சூழல் ஆகஸ்ட் 31ஆம் தேதி மாறியுள்ளது.இந்திய சந்தைகளான மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் வணிக நேர முடிவில் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 255 புள்ளிகள் சரிந்து 64,831 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 93 புள்ளிகள் சரிந்து 19,253 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. கடைசி நேரத்தில் லாபத்தை பதிவு செய்ய முதலீட்டாளர்கள் விரும்பியதால் அதிகளவில் பங்கு விற்பனை நடைபெற்றது. இதன் காரணமாக பங்குச்சந்தைகள் சரிந்து முடிந்தன. இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை இயல்பைவிட 9%குறைவாக பொழிந்த தகவலும் முதலீட்டாளர்கள் மத்தியில்அச்சத்தை ஏற்படுத்தியது. Adani Enterprises, BPCL, Adani Ports, Eicher Motors,Britannia Industies ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.Maruti Suzuki, Cipla, HDFC Life, Titan Company,Hindalco Industries.ஆகிய நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன. BEML, Atul Auto, Indiabulls Housing Finance, Zensar Technologies, TVS Motor Company, Maruti Suzuki, Suzlon Energy, MOIL, RailTel Corporation of India, KPR Mills, Ircon International ஆகிய நிறுவனங்கள் கடந்த 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டன. தங்கம்,விலையிலும் ஏற்றம் நிலவியது. ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் உயர்ந்து 5545 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம் 120 ரூபாய் உயர்ந்து 44,360 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி 80 ரூபாய் 70 காசுகளாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ 80 ஆயிரத்து 700 ரூபாயாகவும் இருக்கிறது.கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு 520 ரூபாய் தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. இந்த விலைகளுடன் 3% ஜிஎஸ்டி, செய்கூலி,சேதாரம் ஆகியவற்றையும் சேர்த்தால்தான் நாம் பாக்கெட்டில் இருந்து எவ்வளவு பணம் நகைக்கடைக்கு தரவேண்டும் என்பது தெரியவரும்.ஆனால் செய்கூலி,சேதாரம் கடைக்கு கடை மாறுபடும்