85-ல் போட்ட 10,000 இன்று 300 கோடி..!!!
ஆசியாவின் மிகப்பணக்காரர் பேங்கர் என்ற பெருமை கொண்ட உதய் கோடக் அண்மையில் தனது தலைமை செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார்.அவர் கடந்த 1985-ஆம் ஆண்டு தன்வசம் இருந்த 10,000 ரூபாய் தற்போது எப்படி கோடிகளில் ரிட்டன்ஸ் தருகிறது என்று தனது வியாபார அனுபவத்தை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 1 லட்சம் பேருக்கு மேலாக வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக கூறியுள்ள உதய் கோடக்,மும்பையில் 300சதுரடி இடத்தில் மும்பையில் தொடங்கப்பட்ட நிறுவனம் எப்படி இவ்வளவு வளர்ந்தது என்று சிலாகித்து பேசியுள்ளார். தனது நிறுவனம் சமூகபொருளாதார முக்கிய நிறுவனமாக மாறும் என்று கனவு உள்ளதாகவும் உதய் கோடக் தெரிவித்துள்ளார். தனது பதவிக்காலம் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை உள்ள நிலையில் அவர் நிறுவனத்தில் பணியாற்றும் தீபக் குப்தாவிடம் தலைமை பதவியை அளித்துவிட்டார். அந்த நிறுவனத்துக்கு புதிய தலைமை செயல் அதிகாரி வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் செயல்பட இருக்கிறார். உதய் கோடக் பதவி விலகினாலும் அவரின் பதவி விலகல் குறித்து ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளிக்க இருக்கிறது. நல்ல தலைமை அதிகாரிக்கு வழிவிடவே தாம் பதவி விலகியதாக உதய் கோடக் கூறியுள்ளார். அந்த நிறுவனமும் உலகின் பல்வேறு நாடுகளிலும் புதிய சிஇஓவுக்கான தேடலை தொடங்கியிருக்கின்றனர்.