இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி குட்…!!
மூத்த பொருளாதார ஆலோசகராக இருப்பவர் அனந்த நாகேஷ்வரன். ஏப்ரல் -ஜூன் மாத உள்நாட்டு உற்பத்தி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 7.8%ஆக இருக்கிறது. இதனை குட் என்று விமர்சித்துள்ள அவர், நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ்வங்கி இணைந்து இந்தாண்டு மொத்த வளர்ச்சியான 6.5% ஆக இருக்கும் என்றும் அன்ந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 7.7 ஆக உள்நாட்டு உற்பத்தி இருக்கும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்ட நிலையில் அதைவிடவும் அதிக வளர்ச்சியை காட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கிராமபுறங்களில் தனியார் துறைகளில் மூலதனம் அதிகரித்துள்ளது என்றார். சேவை சார்ந்த துறைகளின் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சிறுகுறு நடத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் அளித்துள்ள கடன்கள் அதிகரித்துள்ளதாகவும்,விவசாயத்துறைக்கு அளிக்கும் கடன் அதிகரித்திருப்பதாகவும் நிதிஆலோசகர் கூறுகிறார். FMCGஎனப்படும் சந்தையில் வேகமாக விற்கப்படும் பொருட்களின் விற்பனை நகரங்களைவிட இரண்டாம் தர நகரங்கள் மற்றும் கிராமபுறங்களில் அதிகளவில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். மூலதன அளவு ஏப்ரல் -ஜூலை காலகட்டத்தில் 3 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.