ஒரு லிட்டர் பெட்ரோல் 305 ரூபாயா…?
பாகிஸ்தானில் செப்டம்பர் 1ஆம்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 பாகிஸ்தானிய ரூபாயும்,டீசல் 18.44 பாகிஸ்தானிய ரூபாயும் உயர்ந்திருக்கிறது. விலையேற்றத்துக்கு பிறகு ஒரு லிட்டர் பெட்ரோல் பாகிஸ்தானில் 305 ரூபாய் 36 காசுகளாகவும், ஒரு லிட்டர் டீசல் 311 ரூபாயாகவும் உள்ளது.கடந்த மாதம் 15ஆம் தேதிதான் லிட்டருக்கு 20 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் பெட்ரோல்,டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.n வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் மற்றும் உள்ளூர் வரிகள் காரணமாக இவ்வளவு அதிக விலை உயர்ந்திருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பாகிஸ்தானிய ரூபாயின் மதிப்பு என்பது தொடர்ந்து சரிந்து வருகிறது. புதிய காப்பந்து அரசாங்கம் பதவியேற்ற பிறகு மட்டும் அந்நாட்டு ரூபாய் மதிப்பு 4.6% குறைந்திருக்கிறதாம்.ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் என்பது 27.57%ஆக அதிகரித்துள்ளது.கடந்த முறை இருந்த 30.82 %இல் இருந்து பணவீக்கம் தற்போது சற்று குறைந்திருக்கிறது. பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் ஆட்சியில் இருந்தபோது நிலவிய சூழலைவிடவும் தற்போது அங்கு மோசமான நிலை இருப்பதால் மக்கள் விலைவாசியால் விழிபிதுங்கி நிற்கின்றனர்.