ஆவணங்களை தொலைத்த வங்கிக்கு அபராதம்..
வீட்டுக்கடன் உள்ளிட்ட சில கடன்களுக்கு பொதுவாக ஒரிஜினல் டாக்குமண்ட்களை வாங்கிக்கொள்ளும் பழக்கம் சில வங்கிகளிடம் இருக்கிறது. இந்த சூழலில் மனோஜ் மதுசூதனன் என்பவர் தனது வீட்டுக்கடனுக்காக ஆவணத்தை கொடுத்து ஐசிஐசிஐ வங்கியில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கறிஞர் ஸ்வேதாங், சாந்தனு என்பவர் வாயிலாக தேசிய நுகர்வோர் குறைதீர்ப்புஆணையமான NCDRCயில் புகார் அளித்தார்.இந்த வழக்கை சுபாஷ் சந்திரா என்பவர் விசாரித்தார். மனுதாரர் கடந்த 2016ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள சொத்தை வைத்து 1.86 கோடிரூபாய் கடன் வாங்கியுள்ளார்.பின்னர் கடனை திரும்ப செலுத்திவிட்டு ஆவணங்களை கேட்டுள்ளார். ஆனால் ஐசிஐசிஐ வங்கி உரிய ஆவணங்களை தரவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பிட்ட வங்கி தங்கள் ஆவணங்களை பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு மாற்றும்போது தொலைத்துவிட்டதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக 2016ஆம் ஆண்டே புகார் அளிக்கப்பட்டபோதும் அதற்கான இழப்பீட்டுத்தொகையாக 25,000 ரூபாய் அளிக்க வங்கி ஓம்பட்ஸ்மன் அமைப்பு ஆணையிட்டது. ஆனால் அதனையும் தராமல் அலைக்கழிப்பதாக மதுசூதனன் புகாரில் தெரிவித்தார். தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 5 கோடி ரூபாயை வங்கி தரவேண்டியுள்ளதாகவும் மனுதாரர் முறையிட்டார்.உரிய சேவை வழங்காதது தொடர்பாக நடந்த வழக்கில் NCDRCஅமைப்பு ஐசிஐசிஐ வங்கிக்கு 25 லட்சம் அபராதம் விதித்ததுடன் வழக்கு செலவாக 50,000 ரூபாய் தரவும் ஆணையிட்டுள்ளது.