வாரிசை பதிய சொல்லுங்க பிளீஸ்..
இந்தியாவின் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் இருக்கிறார். இவர் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு அண்மையில் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் உரிமை கோராத ஏராளமான பணம் அப்படியே கிடப்பதாகவும் வங்கிகளும்,நிதிநிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களிடம் வாரிசுகளை பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். வங்கிக்கணக்குகளில் மட்டும் 35,000கோடி ரூபாய் அளவுக்கு டெபாசிட் தொகைகள் கிடப்பதாக கூறப்படுகிறது. மற்ற நிறுவனங்களையும் சேர்த்தால் லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும் என்று நிதியமைச்சர் கூறியுள்ளார்.
பொருப்பான ஒரு நிதி கட்டமைப்பை உருவாக்குவது கடமை என்றும் அவர் தெரிவித்தார். ஒரு நாட்டின் வரி வருவாய் மற்றும் பணப்புழக்கம் நிதி கட்டமைப்பில் மிகமுக்கியம் என்று கூறியுள்ள நிதியமைச்சர், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சைபர் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும்,நிறுவனங்கள் மீது பொதுமக்களின் நம்பிக்கை மிக முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார். சர்வதேச நிதி தொழில்நுட்பம் குறித்த நிகழ்ச்சியில் அம்மையார் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது இந்த கருத்தை நிதியமைச்சர் கூறினார்.