பேடிஎம்மில் அதிக முதலீடு செய்யும் ஷர்மா..!!!
பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனராக விஜய் சேகர் சர்மா உள்ளார்.இவர் தனது நிறுவனத்தில் முதலீடுகளை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக அந்த நிறுவனத்தின் அதிகபட்ச பங்கை அவர்தான் வைத்திருக்கிறார்.ஆன்ட் ஃபின் என்ற நிறுவனத்தின் முதலீடு பேடிஎம்மில் இருந்தது. பேடிஎம் நிறுவனத்தின் சிஇஓவாக ஷர்மா திகழ்ந்தார்.இந்தியா சீனா இடையே எல்லைப்பிரச்னை வந்தபோதுசீன நிறுவனத்தின் பங்கை ஷர்மா வாங்கியுள்ளார். அதாவது 19.42% பங்கு சர்மா அப்போது தன்வசம் வைத்திருந்தார். ஆண்ட் பின் நிறுவனம் பேடிஎம்மின் பங்குகளை திரும்ப அளிக்க விரும்பினால் அதனை மீண்டும் வாங்க தாம் தயாராக இருப்பதாக விஜய் சேகர் தெரிவித்தார். ஏற்கனவே அந்த சீன நிறுவனம் அலிபாபா நிறுவனத்தில் இருந்து முழுமையாக வெளியேறியது.ஜப்பானைச் சேரந்த சாஃப்ட்வங்கியும் தனது பங்குகளை பேடிஎம்மில் இருந்து வெளியே எடுத்துவிட்டது. அண்மையில் 12 டாலர் மதிப்பு கொண்ட சவுண்ட் பாக்ஸை பேடிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.இது வணிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 2016ஆம் ஆண்டு இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டதில் இருந்து பேடிஎம், கூகுள் பே,போன்பேவின் வளர்ச்சி கடுமையாக உயர்ந்திருக்கிறது.