சீனாவின் பொருளாதாரம் மந்தம்..
அமெரிக்க பொருளாதாரத்துடன் போட்டி போடும் தகுதியுள்ள நாடாக சீனா திகழ்கிறது. ஆனால் சமீபத்திய சீன பொருளாதாரம் பெரிய சரிவை சந்தித்து வருகிறது. இதனால் அமெரிக்காவுடன் போட்டி போட முடியாத அளவுக்கு நிலைமை சிக்கலாகியுள்ளது.
அமெரிக்க பொருளாதாரத்துடன் போட்டி போட சீனாவுக்கு 2040 வரை அவகாசம் தேவைப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பெருந்தொற்றுக்கு முன்னதாக சீனாவின் பொருளாதாரம் அமெரிக்க பொருளாதாரத்தை மிஞ்சும் வகையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.ஆனால் தற்போதைய சூழல் அப்படியாக இல்லை என்பதே நிலையாக உள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி சரிவு 2030ஆம் ஆண்டு 3.5 விழுக்காடாகவும்,2050-ல் 1விழுக்காடாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பொருளாதார நிலை என்பது அந்நாட்டு ரியல் எஸ்டேட் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக ஏற்றுமதிகள் தடைபட்டதுடன்,சேவைத்துறையும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் பொருளாதார நிலை என்பது 2024ஆம் ஆண்டு 5 விழுக்காட்டுக்கும் கீழாக சரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் நிலையை அமெரிக்கா மற்றும் ஜி7 நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன. 1960ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக சீனாவில் பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. 1,7%அமெரிக்க பொருளாதாரம் உயரும் என்றும் 2050ஆம் ஆண்டு அமெரிக்க பொருளாதாரம் 1.5% வளரும் என்று புளூம்பர்க் கணித்துள்ளது.