LICயின் புதிய அப்டேட் தெரியுமா..?
வாழும்போதும் வாழ்க்கைக்குபிறகும் என்ற தாரக மந்திரத்துடன் இயங்கும் எல்ஐசி வெற்றிகரமான அரசு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறிப்பிட்ட நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்க வைக்க பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அதாவது ஏற்கனவே எடுத்த பாலிசி,பாதியில் நின்று போனால் அதனை மீட்கும் முயற்சியில் LIC களமிறங்கியுள்ளது. எல்ஐசி பாலிசியை தொடர முடியாமல் போனதற்கான காரணத்தை தெரிவித்துவிட்டு அவற்றை மீண்டும் தொடரும் வகையில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் இந்த மாத தொடக்கம் முதல் நடப்பதாக எல்ஐசி அறிவித்துள்ளது.உரிய காரணமாக இருந்தால் அதனை பரிசீலிக்க முடியும் என்றும்,இல்லாதபட்சத்தில் அதனை நிராகரிக்கும் உரிமையும் எல்ஐசி பெற்றுள்ளது. 3 ஆண்டுகள் சந்தா செலுத்திவிட்டு அதன்பிறகு தொடர முடியாதவர்களுக்கும், பாலிசி எடுத்தவர் 6 மாதங்களுக்குள் மரணமடைந்தாலோ அதற்கு குறிப்பிட்ட தொகை அளிப்பது தொடர்பாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதேபோல் 5 ஆண்டுகள் பணம் செலுத்தியவர்களுக்கு என தனி பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பாலிசிகள் தொடர்பாக வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்துகொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 8976862090 என்ற எண்ணிற்கு முதலில் ஒரு ஹாய் அனுப்ப வேண்டும், அதில் வரும் 11 ஆப்சன்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்