22,000 பேருக்கு ஐடி நோட்டீஸ்..ஏன் தெரியுமா??
இரண்டரை லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருட வருமானம் வருவோருக்கு எந்த ஐடி பிரச்னையும் கிடையாது.ஆனால் 5லட்சத்துக்கும் அதிகமாக சம்பாதிப்போருக்குத்தான் எத்தனை எத்தனை பிரச்னைகள்.அதில் ஒன்றுதான் Form16 நிரப்புவது. வருமான வரி உச்சவரம்பு அண்மையில் மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் பழைய வருமான வரி செலுத்தும் முறையில் குறிப்பிட்ட தொகை வரை சலுகை பெற இயலும்.அதாவது அரசு அனுமதித்த சலுகைகளை கணக்கு காட்டி வரியே செலுத்தாமல் கூட தப்ப முடியும்.அப்படி கணக்கு காட்டியவர்களில் 22,000 பேருக்கு வருமான வரித்துறையினர் புதிதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 2023-24 நிதியாண்டில் தாக்கல் செய்திருக்கும் நபர்களில் 22,000 பேருக்கு இந்த நோட்டீஸ் சென்றுள்ளது. அதாவது அவர்கள் தாக்கல் செய்ய டிடெக்சன்கள் திருப்திகரமாக இல்லை என்பதே இந்த நோட்டீஸ்களின் அர்த்தம். 50,000 ரூபாய்க்கும் அதிகமாக கணக்கு காட்டிய 12,000 பேரும் இதில் தப்பவில்லை.HUF நிதி என கணக்கு காட்டிய 8,000 பேருக்கும்,அறக்கட்டளைகளுக்கும் இந்த நோட்டீசானது சென்றிருக்கிறது. இதில் சிலருக்கு வங்கிக்கணக்கு எண்கள் மாறுபடுவதும் காரணமாக கூறப்படுகிறது.இது முதல் நோட்டீஸ்தான் என்றும் உரிய விளக்கம் தரவில்லை என்றால் மேலும் ஒரு நோட்டீஸ் வரும் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வரி ஏய்ப்பு செய்வோரை எளிதில் கண்டுபிடிக்க டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பல்வேறு உத்திகளை வருமான வரித்துறை செய்து வருகிறது. வருமான வரியை தாக்கல் செய்யும் மக்களின் விவரங்களை சரிபார்க்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறையின் மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.