“முதலில் சம்பளம் குறைவாத்தான் இருந்தது”
வயது என்பது வெறும் எண்கள் மட்டும்தான், உங்களிடம் இருக்கும் ஐடியா எந்த மாதிரியானது என்பதே முக்கியம் என்கிறார் பிரபல வங்கி அதிபரி தீபக் பரேக். நிதானம் மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள அவர், HDFC நிறுவனம் பல ஏற்றத்தாழ்வுகளை கடந்ததாக குறிப்பிட்டுள்ளார். முதல் 10 ஆண்டுகள் தாக்குப்பிடித்ததுதான், தனக்கு நம்பிக்கை அளித்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அந்த 10 ஆண்டுகள் சம்பளம் குறைவாகத்தான் இருந்ததாக கூறினார். அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் HDFC வங்கியின் முன்னாள் தலைவரான அவர் பங்கேற்று தனது பசுமையான நினைவுகளை அசைபோட்டார். தனது நிறுவனத்துக்கு வந்து லோன் கேட்ட முதல் வாடிக்கையாளர், முதல் சம்பளம் ஆகியவற்றையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். மிகச்சிறப்பான வளர்ச்சியை அளித்ததால் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை எளிதாக கிடைத்ததாக கூறினார். முதலீட்டாளர்களை சந்திக்க ஆண்டுக்கு இரண்டு முறை சுற்றுப்பயணம் செய்ததை நினைவு கூர்ந்த அவர், இப்போது யாரும் அதை செய்வதில்லை என்றார். ஒரு வணிகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகள் மிகவும் அவசியம் என்று கூறும் அவர்,முதலீட்டுக்கு முன்பு 3,4 முறைகள் அவர்கள் நிறுவனங்களை சந்திக்க வேண்டும் என்றார். தொடக்கத்தில் தங்கள் நிறுவனத்தை பிரபலப்படுத்த யாரும் இல்லை என்ற தீபக் சுட்டிக்காட்டினார். ரிசர்வ் வங்கி ,தனியார் வங்கிக்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக செய்தித்தாளில் படித்து 50 கோடி முதலீடு செய்து வங்கிக்காக விண்ணப்பித்தபோது முதலில் தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக கூறினார். சொத்து மதிப்புகளை வைத்து கடன் தருவதில்லை என்று கூறிய அவர், பணப்புழக்கத்தை வைத்தே கடன் தந்ததாக கூறினார்.