ஹூக்கூம்..கலாநிதி மாறனுக்கு மேலும் 100 கோடி …
ஜெயிலர் படத்தில் 500 கோடி வசூல் வந்ததை விட அதிக மகிழ்ச்சியில் கலாநிதி மாறன் தற்போது இருப்பார்..காரணம் என்னவெனில் நெடுநாட்களாக வரவேண்டியிருந்த 100 கோடி ரூபாயை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கலாநிதிமாறனுக்கு தந்துள்ளது. செப்டம்பர் 11ஆம் தேதி 77.5 கோடி ரூபாயும், 12 ஆம் தேதி 22.5 கோடி ரூபாயும் கலாநிதி மாறனுக்கு தந்துவிட்டதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்திருக்கிறது. கிரிடிட் சூய்சி நிறுவன விவகாரத்தில் நீதிமன்ற ஆணைப்படியே இந்த பணம் கலாநிதிமாறனுக்கு தரப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற ஆணையைப் பின்பற்றி இந்த தொகையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கலாநிதி மாறனுக்கு தந்துள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 2015ஆம் ஆண்டு கல் ஏர்வேஸ் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி பின்னர் அது பாதியில் கைவிடப்பட்டது. 2018 மற்றும்அதைத் தொடர்ந்து வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன.உச்சநீதிமன்றமும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் பணத்தை தர ஆணையிட்டது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த உச்சநீதிமன்ற ஆணைக்கு இணங்க ஸ்பைஸ்ஜெட் ஒரு வழியாக தற்போது 100 கோடி ரூபாய் திரும்ப கலாநிதி மாறனுக்கே அளித்துள்ளது.