அடுத்த 5 வருஷத்துக்கு தீட்டுங்க வரிய….மத்திய அரசு அதிரடி
இந்தியாவின் உட்கட்டமைப்புகளில் ஸ்டில் துறை என்பது மிகமுக்கியமான இடத்தை வகிக்கிறது.இந்த நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல்களால் இந்திய சந்தை பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு புதிய வரியை மத்திய அரசு விதித்துள்ளது.
இந்தியாவிற்குள் மற்ற நாட்டு ஸ்டீல் தேவையின்றி கொட்டப்படுவதை தடுக்க கடந்த 2018ஆம் ஆண்டே ஆண்டி டம்பிக் டூட்டி என்ற பெயரில் வரி விதிக்கப்பட்டது.இது 5 ஆண்டுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் அது 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.அதாவது ஒரு டன் ஸ்டீலுக்கு இந்த வகை வரியாக 613 டாலர் வசூலிக்கப்படுகிறது.
இந்த புதிய வரி என்பது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் அளவை கட்டுப்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது.இந்தியாவில் எவ்வளவு சீன ஸ்டீல் இருக்கிறது என்பதை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் இதனை பார்ப்பதாக ஸ்டீல் துறை செயலர் நாகேந்திரநாத் சின்ஹா தெரிவித்துள்ளார். ஏப்ரல்- ஜூலை காலகட்டத்தில் மட்டும் இந்தியாவிற்கு இரண்டாவது அதிகபட்சமாக சீனா, ஸ்டீலை ஏற்றுமதி செய்திருக்கிறது.ஆண்டுக்கு ஆண்டு இறக்குமதி செய்யப்படும் ஸ்டீலின் அளவு மட்டும் 62% அதிகரித்துள்ளது. அதாவது 0.6 மில்லியன் டன் அளவுக்கு இந்த ஸ்டீல் இறக்குமதியானது நடைபெற்று வருகிறது.