வரலாற்றிலேயே முதல் முறையாக…கொட்டிய துட்டு..
செப்டம்பர் 11ஆம் தேதி இந்திய பங்குச்நச்தைகளில் புதியசாதனை நிகழ்த்தப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி முதல் முறையாக 20,000 புள்ளிகள் கடந்துள்ளது.நிஃப்டி 50, மும்பை பங்குச்சந்தை ஆகியவற்றில் சுமார் 2% முன்னேற்றம் காணப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் சீரடைந்த உள்நாட்டு தரவுகளின் புள்ளிவிவரங்களே பங்குச்சந்தைகள் உயர காரணமாக கூறப்படுகிறது.அதிகப்படியான சரக்கு மற்றும் சேவை வரி, தனியார் சந்தை செலவுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களும் முக்கியமாக கருதப்படுகிறது.18.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை கொட்டி முதலீடு செய்திருக்கின்றனர். அமெரிக்க பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவுக்கு நேர் எதிராக இந்தியாவில்நிலை உள்ளதால் இந்திய சந்தைகள் மீது முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.நெடுநாட்கள் கண்ணோட்டத்தில் முதலீடுகளை பார்க்க வேண்டும் என்று நிபுணர்கள் முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆட்டோமொபைல், தொழில்துறையில் நல்ல முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன.இந்தியாவில் தேர்தல்களும் வர உள்ளதால்,சந்தைகளில் ஏற்றம் அதிகரித்தே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.உள்நாட்டில் பணப்புழக்கம்,கார்பரேட் துறையில் ஏற்றம் உள்ளிட்ட காரணிகளால் இந்திய சந்தைகளில் சாதகமான சூழல் காணப்படுகிறது. பிரிட்டன் மத்திய வங்கி,இந்தியாவின் பணவீக்கம் மற்றும் அமெரிக்க பணவீக்கத்தின் தரவுகளை முதலீட்டாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.