3.5 பில்லியன் டாலர் கடன் வாங்கும் அதானி..
அதானி குழுமம் அண்மையில் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தை வாங்கியிருந்தது.இதற்காக அதிக தொகை கடனாக பெறப்பட்டது. பெறப்பட்ட கடன் 3 ஆக பிரிக்கப்பட்டது. 3.5 பில்லியன் அளவுக்கான கடனை தற்போது மீண்டும் வேறு வங்கிகளிடம் இருந்து வாங்க அதானி குழுமம் திட்டமிட்டுள்ளதாகவும் ஆசியாவிலேயே அதிகப்படியாக வாங்கப்பட்ட கடனாக இந்த டீல் முடிக்கப்பட்டுள்ளது. கடனாக பெறப்படும் புதிய தொகையில் இருந்து 300 மில்லியன் டாலர் அம்புஜா சிமென்ட்ஸ் வாங்கிய கடனில் அடைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. DBS Group Holdings Ltd., First Abu Dhabi Bank PJSC, Mizuho Financial Group Inc, Mitsubishi UFJ Financial Group, Inc. Sumitomo Mitsui Banking Corp. உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறப்பட அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஹிண்டன்பர்க் அறிக்கை காரணமாக பெரிய சரிவை சந்தித்த அதானி குழுமம்,மீண்டும் படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. இந்த கடன்களுக்கான டீல் முடிந்தால் ஜப்பானைவிட்டு வெளியே இந்தாண்டு பெறப்படும் 4 ஆவது பெரிய கடனாகும். போதிய நிதியை உறுதிபடுத்த கடந்த ஜூலையில் லோக்கல் கரன்சி பாண்டுகளையும் அதானி குழுமம் வெளியிட்டு நிதி திரட்டியிருந்தது.