“வெளியில் இருந்து வரும் நிதி தேவைப்படாதாம்”
பெட்டிக்கடை வரை பெரிய மால்கள் வரை பேடிஎம் நிறுவனம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.அந்த நிறுவனத்துக்கு வருங்காலங்களில் ஃபண்டிங் எனப்படும் வெளியில் இருந்து தரப்படும் நிதி தேவைப்படாது என்று அதன் தலைமை நிதி அதிகாரி மதுர் தியோரா தெரிவித்துள்ளார். பேடி எம் நிறுவனத்தில் தற்போது 8,300 கோடி ரூபாய் அளவுக்கு பணப்புழக்கம் இருந்து வருகிறது. அந்த நிறுவனத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய மதுர் தியோரா, தங்கள் நிறுவனம் விரைவில் கடன் இல்லாத நிறுவனமாகிவிடும் என்றார். சிறிய கடைகளில் கூட பேடிஎம் நிறுவனத்தின் சிறிய சவுண்ட் பாக்ஸ் உள்ளதாக கூறியுள்ள அவர், சிறு வணிகர்கள் பற்றி தங்கள் நிறுவனம் நன்கு புரிந்துவைத்துள்ளது என்றார்.
POS எனப்படும் புதிய இயந்திரத்தை அந்நிறுவனம் அண்மையில் அறிவித்துள்ளது. இந்த இயந்திரம் கிரிடிட் கார்டு மற்றும் யுபிஐ மூலம் வாடிக்கையாளர்களிடம் இருந்து வணிகர்களுக்கு பணத்தை வழங்கும் திறன் பெற்றதாகும். விரைவில் இந்தியாவின் டிஜிட்டல் பேமண்ட் கட்டமைப்பு 10 கோடியை எட்டிவிடும் என்றும் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி விஜய் ஷேகர் சர்மா தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவில் அதிக முதலீடுகளை செய்ய தயாராக இருப்பதாகவும் மதுர் கூறியுள்ளார். புதிய நுட்பங்கள் இந்தியாவில் விரைவான மற்றும் பாதுகாப்பான பேமண்ட்களுக்கு உதவும் என்றும் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.