கண்ணதாசா??? ஜேசுதாஸா??? சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்..!!!
காவலன் படத்தில் வரும் வடிவேலு போல நாட்டின் பெயரே கண்ணதாசா ஜேசுதாசா என்று குழம்பும் வகையில் பெயர் மாற்ற சர்ச்சை தலைதூக்கியுள்ளது. இந்த நிலையில் வணிகத்தில் இருக்கும் நிறுவனங்கள் இந்தியாவின் பெயரில் வணிகம் இருந்தால் அது வாடிக்கையாளர்கள் உடன் ஒன்றி போகும் வகையில் பெயர்களை மாற்றுவதும் வழக்கம்தான். அந்த வகையில் பிரபல புளூ டார்ட் நிறுவனம் இந்தியாவில் தனது டார்ட் பிளஸ் என்ற கொரியர் சேவையை பாரத் டார்ட் என்று பெயர் மாற்றியுள்ளது. இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் தங்கள் சேவையை அளிக்கும் புளூ டார்ட் நிறுவனம் தனது நிறுவன பெயரை மாற்றுவது முக்கியம் என்று கூறியுள்ளது. ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோரை இந்தியாவின் பெயரை குறிப்பிடாமல் பாரத் என்று கூறியிருந்த சூழலில் தற்போது இந்த பெயர் மாற்றம் தனியார் நிறுவனம் செய்திருக்கிறது. இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவது குறித்து வரும் 18ஆம் தேதி அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் பெயரை மாற்றுவதால் இந்தியாவின் வரலாற்றை தெளிவற்றதாக மாற்றுவதாக எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவிக்கின்றனர்