பிண்டெக் நிறுவனங்களுக்கு சுயகட்டுப்பாட்டு அமைப்பு..
இந்திய பிண்டெக் துறைக்காக தனக்கென ஒரு சுய கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க ரிசர்வ் வங்கி பணிகளை தொடங்கியுள்ளது. அடுத்த சில வாரங்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேமன்ட்ஸ் கழகத்தின் உறுப்பினர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு குழு அமைத்தனர். காப்பீடு,முதலீடு மற்றும் விவசாயத்துறைக்கு இந்த நுட்பங்கள் பயனடையும் வகையில் குழுவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.7 கோட்பாடுகளுக்கு கீழ் புதிய கட்டுப்பாட்டு விதிகளும் நிதிநுட்ப நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் நலன் கருதி நிதி நுட்ப நிறுவனங்கள் எப்படியெல்லாம் இயங்கவேண்டும் என்றும் அந்த விதிகளில் கூறப்பட்டுள்ளன. நுண் கடன் வழங்கும் நிறுவனங்கள் பரஸ்பர நிதி நிறுவனங்களை போல இயங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடந்த நிதி நுட்ப நிறுவனங்கள் சுய கட்டுப்பாட்டு அமைப்புகளாக இயங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கேட்டுக்கொண்ட நிலையில், நிதி நிறுவனங்களே தங்கள் சுய கட்டுப்பாட்டு விதிகளை தயாரித்து வருவதாகவும்,அதற்கு ரிசர்வ் வங்கி விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தமில்லாத விற்பனை,சிறப்பான தொழில்தர்மத்தை சரி செய்ய சுய கட்டுப்பாடு அவசியம் என்றும் அண்மையில் சக்தி காந்ததாஸ் கூறியிருந்தார். அவர் பேசியது போலவே சுய கட்டுப்பாட்டு அமைப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.