சாக்லேட் அனுப்பும் எஸ்பிஐ..
மாதந்தோறும் கடனை திரும்பி செலுத்த அறிவுறுத்தும் வகையில் கடன் பெற்றவர்களுக்கு சாக்லேட்டை அனுப்ப பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்திருக்கிறது. மாதத்தவனை தவறப்போகும் நிலையில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு முதல்கட்டமாக இதனை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. கடன் பெற்றவர்களை நினைவூட்டும் அந்த வங்கி, கடன் பெற்றவர்களின் வீட்டுக்கே சென்று நினைவூட்டும் வகையில் சாக்லேட் தர இருக்கிறது. கடனை திரும்ப வாங்கும் முயற்சியாக இது மேற்கொள்ளப்பட இருக்கிறது கடன்களுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில் கொடுத்த கடனை திரும்ப வாங்குவது வங்கிகளுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்பிஐ வங்கியில் கடன் வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 16.46விழுக்காடு கடன் அளிக்கும் விகிதம் அதிகரித்துள்ளது. மொத்த கடன் தொகை அளவு 12லட்சம் கோடி ரூபாயாக உள்ளது,ஜூன் மாதம் வரையில் இந்த கடன் 10.34லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.ஆண்டுக்கு ஆண்டு இந்த வங்கியின் வளர்ச்சி 13.9விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் நினைவூட்டும் புதிய முறையும், சாக்லேட் அளித்து நினைவூட்டும் இரண்டாம் முறையும் விரைவில் அமலாக இருக்கிறது.வழக்கமாக கடன் வாங்கிவிட்டு திரும்ப தர இயலாத சூழலில் உள்ளோருக்கு மிரட்டல் விடுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அன்பு பாதையை அந்த வங்கி தேர்ந்தெடுக்க உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக இணையவாசிகள் தெரிவித்துள்ளனர்.