புதிய ஸ்டீல் ஆலை அமைக்கும் கங்குலி..
தாதா என்று அன்பாக அழைக்கப்படும் சவ்ரவ் கங்குலி, தற்போது கிரிக்கெட் ஆடவில்லை என்றாலும் தனக்கென ஒரு தனி கெத்தை வைத்திருக்கிறார். இவர் அண்மையில் அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். அரசியலில் மிகமுக்கிய இரண்டு பிரபலங்களும் சந்தித்து பேசிய பேச்சு உலகளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது . விஷயம் என்ன என விசாரிக்கையில் கதை வேறாக இருக்கிறது. சல்போனி என்ற மேற்குவங்கத்தின் ஒரு பகுதியில் கங்குலி தனது புதிய ஸ்டீல் ஆலையை தொடங்க இருக்கிறாராம். முதலீடுகளை ஈர்க்க, ஸ்பெயின் மற்றும் துபாய் நாடுகளுக்கு மம்தா பானர்ஜி புறப்பட்டுள்ளார்.அங்கு பெறப்படும் முதலீடுகளில் அதிக ஆலைகளை அவர் அமைக்க இருக்கிறார். கங்குலியின் ஆலை அடுத்த 5 அல்லது 6 மாதங்களில் அமைய இருக்கிறது என்கிறது நம்பத் தகுந்த வட்டாரங்கள்.ஏற்கனவே கடந்த 2007ஆம் ஆண்டு தனது முதல் ஸ்டீல் பேக்டரியை கங்குலி சிறிய அளவில் ஆரம்பித்தார். பின்னர் இரண்டாவது ஆலையும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த 6 மாதங்களில் 3 ஆவது ஸ்டீல் பேக்டரி தயாராகும் என்றும் தாதா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.