இப்படியே செய்தால் திவாலாகத்தான் ஆகுமாம்… சொல்கிறது பிரபல நிறுவனம்…
அமெரிக்காவின் பிரபல நிறுவனமான ஃபோர்ட் நிறுவனம்,உலகளவில் தரமான கார்கள் மற்றும் வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றன. இந்த நிலையில் தங்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் போதவில்லை என்று ஊழியர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். வெயின்,மிச்சிகன், ஒஹையோ ஆகிய பகுதிகளில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது
ஃபோர்ட் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பணியாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் வாழ்க்கைத்தரம் அதிகரிக்கும் செலவுகளை கருத்தில் கொண்டு 36% சம்பள உயர்வை தொழில் சங்கங்கள் கோரி வருகின்றன.
இதற்கு பதில் அளித்துள்ள போர்ட் நிறுவனம்,நியாயமான சம்பள உயர்வு ஏற்கலாம் ஆனால் தற்போது கேட்கப்படும் சம்பள உயர்வு என்பது நிறுவனத்திற்கு பெரிய அழுத்தத்தை அளிக்கும் என்றும் கூறியுள்ளது. ஃபோர்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜிம் ஃபார்லி அண்மையில் இது தொடர்பாக பதில் அளித்துள்ளார். அதில் தற்போது தொழிலாளர்கள் கேட்கும் சம்பளத்தை அளித்தால் ஃபோர்ட் நிறுவனத்தின் 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்படும் என்றும் நிறுவனம் திவாலாகத்தான் ஆகும் என்றும் கூறியுள்ளார். ஆனால் நிறுவனங்களின் வாகனங்கள் உற்பத்தி செலவில் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் என்பது 4 முதல் 5%ஆகத்தான் இருக்கிறது. தங்கள் உழைப்பால் கோடிகளில் சம்பாதிக்கும் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு பணம் தரலாமே என்பதுதான் ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது கார்பரேட் பேராசை மனநிலைதான் மிகப்பெரிய பிரச்னை என்றும் தொழில்சங்கங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 88 ஆண்டுகள் வரலாற்றில் முதல் முறையாக 3 பெரிய நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்வதாகவும் அறிவித்துள்ளனர்.உரிய சம்பளம் தரவில்லை என்றால் வரும் நாட்களில் இன்னும் போராட்டம் தீவிரமடையும் என்றும் தொழில் அமைப்புகள் அறிவித்துள்ளன